திருச்சி மாநகர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த பெட்டிகடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைஅடுத்து  தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறையினரின் எச்சரிக்கையை மீறி பெட்டிக்கடையில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்ததையடுத்து தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பெட்டிக்கடை இனி தொடர்ந்து இயங்க தடை ஆணை வழங்கி சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் பெட்டிக் கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தாள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments