Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 5 மாதமாக பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் – கண்ணீருடன் டிஐஜியிடம் கோரிக்கை மனு!!

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர்கள் ஜோசப் – அன்னமேரி. வயல்வெளியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவருடைய மகள் பிரியா (26). பெங்களூரில் ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி கடந்த 7 மாதங்களாக பூஞ்சோலை பகுதியில் தன்னுடைய வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் – மல்லிகா ஆகியோரின் மகன்கள் பரத் மற்றும் சின்னண்ணன்(28) ஆகியோர் இவர்களின் இடத்தை அபகரித்து பாதையினையும் அபகரித்து வந்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனைகள் வந்துள்ளது

இந்நிலையில் செங்கோட்டையனின் இளையமகன் சின்னண்ணன் பிரியா என்பவருக்கு பெங்களூரில் இருந்து வந்தது முதலே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பிரியா என்பவரின் வீடு காட்டுப் பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் கழிவறை கூட இல்லாத நிலையில் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் செல்போன் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார். எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் முயற்சியில் ஈடுபட்டார். செய்வதறியாது தவித்த உடல்நிலை குறைந்த பிரியா தனது அம்மானை அழைத்தபோது அவர் குரல் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது சின்னண்ணன் என்பவர் அங்கிருந்து வெளியே ஓடியுள்ளார்.

சின்னண்ணன் தன் குடும்பத்திடம் சொல்லி பிரியா என்பவருக்கு கொலை மிரட்டலும் கையை கடித்து கண்களில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு இன்று நடவடிக்கை எடுக்கக் கோரியும், என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும் திருச்சி டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *