நேற்று 21.11.2021 தேதி அதிகாலை ஆடுகளை திருடி கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லணை தோகூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19). இவருடைய உறவுக்கார சிறுவர்கள் 10 மற்றும் 14 வயதுடைய இருவர் உள்ளிட்ட மூன்று பேரையும் சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி பிடித்து பள்ளத்துபட்டி அருகே உட்கார வைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.
அப்போது மணிகண்டன் (19) கையில் இருந்த அரிவாளை வைத்து சிறப்பு எஸ்ஐயை வெட்டி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments