பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேரணியை காவேரி மருத்துவமனையின் பொது மேலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
100க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி திருச்சி கன்டோன்மென்ட் காவேரி மருத்துவமனையில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மருத்துவமனையில் நிறைவடைந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn







Comments