Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி எடுத்து சென்ற மூதாட்டியின் சடலம் – பாலம் அமைத்து தர கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமரவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சேசலூர். இங்கிருந்து பாலப்பட்டி வழியாக வடக்கு அம்மாப்பட்டி, தேக்கமலை கோயில் ஆகியவற்றுக்கு பெரியாறு வாய்க்கால் வழியை தான் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். வாய்க்கால் பகுதிக்கு முன்னதாகவே நின்று விட்ட தார் சாலைக்கு பின் ஒற்றை அடி பாதையாக கால்வாய்க்கு சென்று, பின் கால்வாய் கடந்து சேறும் சகதியுமான கற்கள் நிறைந்த கரட்டு மேட்டில் ஏறி செல்ல வேண்டும். நடை பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவசர தேவைகளுக்கு இருச்சக்கர வாகனங்களை கூட பயன்படுத்த முடியாத நிலை என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக  உயிரிழந்த பழனிச்சாமி மனைவி வெள்ளையம்மாளுக்கு, இறுதி சடங்குகள் செய்ய வந்த உறவினர்களும், ஊர் மக்களும் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரில் தட்டுதடுமாறியே கடந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மயானத்திற்கு செல்ல வெள்ளம்மாளின் உடலை உறவினர்கள் வாய்க்காலில் முழங்கால் அளவு தண்ணீரிலே கடந்து சென்று, பின் ஒற்றையடி பாதையில் பயணித்து மயானத்திற்கு சென்றனர்.

இதுகுறித்து அரசியல் பிரமுகர்களிடமும், ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் பலமுறை மனு அளித்தும் யாரும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இப்பகுதியில் முழுமையான சாலையும், வாய்க்கால் பகுதிக்கு மேம்பாலமும் அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *