திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அறிவுரையின் பேரில் திருச்சிராப்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் சம்பந்தமாக நேற்று (02.12.2021) சிறப்பு அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சி சரகத்தில் 245 வழக்குகள் (திருச்சி 84, புதுக்கோட்டை 43, கரூர் 33, பெரம்பலூர் 23 மற்றும் அரியலூர் 62) பதிவு செய்யப்பட்டு 243 எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 1,53,573 மதிப்புள்ள சுமார் 93.500 கிலோ புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments