திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 2022 ஆம் ஆண்டின் 13 பக்கங்கள் கொண்ட பல வண்ண காலண்டர் இன்று (05.12.2021) முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120/- மாதம் தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுக்கான விபரங்கள் அடங்கியுள்ளது.
மேற்படி காலண்டர்கள், கோயில் தகவல் மைத்திலும், மூலவர் பெருமாள் கிழக்குப் புறமாக பக்தர்கள் செல்லும் வழியிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
முதல் விற்பனையை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து பக்தர் ஒருவருக்கு வழங்கி துவக்கி வைத்தார். அருகில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments