திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆலமரத்து குளம் சுமார் ஜந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது, மணப்பாறை பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையின் போது இந்த குளம் முழு கொள்ளவும் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் உபரி நீர் வெளியேறுவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்து தண்ணீர் குளத்து கரையின் ஒரத்தில் வெளியேற்றப்பட்டது.
ஆனால் நேற்று இரவு குளத்தின் மையப்பகுதியில் கரை உடைந்து குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேறி அருகே உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது, குளம் உடைந்த தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய சேர்மன் அமிர்த வள்ளி ராமசாமி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட்டு குளம் உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுத்து வருகின்றனர்.

இதனிடையே சீகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்.. சுமார் ஜந்தரை ஏக்கர் பாசன வசதி கொண்ட குளம் இதில் தண்ணீர் வெளியேறுவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்தது.
பின்னர் சமாதானமடைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு குளத்தின் மையப்பகுதி கரையை மர்ம நபர்கள் உடைத்துள்னரா? அல்லது இயற்கையாக உடைந்ததாக என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments