உலகப்புகழ் பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் கடந்த 04.12.2021ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் இன்று மோகினி அலங்காரம் எனும் நாச்சியார் கோலத்தில் காட்சி தந்தார்.

மூலஸ்தானத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் (பெண் வேடம்) நம்பெருமாள் புறப்பட்டு வந்தார். இன்று மாலை 4.30 மணி வரை அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பின்னர் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக் கொட்டார பிரகாரம் வழியாக கருட மண்டபத்தில் நம்பெருமாள் வீற்றிருப்பார்.
 அதையடுத்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார். நாளை அதிகாலை 3.30 நம்பெருமாள் எத்தனை அடி அந்தரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலை கடந்து செல்வார்.
அதையடுத்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார். நாளை அதிகாலை 3.30 நம்பெருமாள் எத்தனை அடி அந்தரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலை கடந்து செல்வார்.
 கோவிட் தொற்று காலம் என்பதால் பக்தர்கள் ,பொதுமக்கள் நாளை அதிகாலை நம்பெருமாள் புறப்பாட்டின் போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. காலை 7 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்  வருகிற 24-ஆம் தேதி 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 31 Oct, 2025
31 Oct, 2025                           219
219                           
 
 13 December, 2021
 13 December, 2021

Comments