திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை (எ) நொண்டி குழந்தை. இவரது மகன் பெலிக்ஸ் ஜான்சன் (28) என்பவர் ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து சராமரியாக வெட்டியுள்ளனர். இதில் பெலிக்ஸ் ஜான்சன் முகம் சிதைந்து போனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுப்பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பெலிக்ஸ் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி கொலை சொந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி அலெக்ஸின் தம்பி பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் சின்ராசு கொலை செய்யப்பட்ட போது அவரது நண்பர்கள் விரைவில் என்று போஸ்டர் அடித்து இருந்தனர். இது சம்பந்தமாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சில பேரை கைது செய்தனர். அதனால் இந்தக் கொலை பழிக்குப் பழி நடந்திருக்குமோ என்ற கோணத்தில் திருவெறும்பூர் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் திருச்சி எஸ்.பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தார். குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments