Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் 899 வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களில் 899 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறுவதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இது வரை 1620 நபர்கள் விண்ணப்பித்துள்னர். இதில் 899 நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 57 விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 202 விண்ணப்பங்களில் வாரிசுதாரர் மற்றும் சட்ட ரீதியான பிரச்னை காரணமாக வழங்க இயலாத நிலை உள்ளது. எஞ்சிய விண்ணப்பங்களில் உரிய ஆவணங்கள் முழுமையாகத் தாக்கல் செய்யப்படவில்லை. இத்தகைய விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் (http://tiruchirappalli.nic.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்கள் கொரோனா சிகிச்சை ஆவணம், இறப்புச்சான்று, வாரிசுச்சான்று மற்றும் வங்கிக் கணக்கு எண் குறித்த ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அல்லது தங்களது தாலுகாவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்து நிதி உதவியை உடன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *