Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் 50%  பேர் மட்டுமே முககவசம் அணிவதாக மாவட்ட ஆட்சியர் வேதனை

திருச்சி மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் வெளியிட்டார். வருகின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இந்த வாக்காளர்  பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்கலாம்.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகப்பட்சமாக 3,11,252 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக லால்குடி தொகுதியில் 2,17, 712 – வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை விட 3917 வாக்காளர்கள் தற்போது கூடுதலாக தகுதி பெற்றுள்ளனர். அதேபோல திருச்சி மாவட்டத்தில் இறந்த வாக்காளர்கள் என 30,760 பெயர்கள் நீக்கம்.

2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியைக் தகுதி நாளாகக் கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 – சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சிவாராசு  வெளியிட்டார். மாவட்டத்தில் 11,35,752 ஆண் வாக்களர்கள்,12,10,000 பெண் வாக்களர்கள்,284 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 23,46,036 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகப்பட்சமாக 3,11,252 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக லால்குடி தொகுதியில் 2,17, 712 – வாக்காளர்கள் உள்ளனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்  சிவராசு….வாக்காளர் பட்டியல் வெளியிட சிறப்பாக செயல்பட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதேபோல தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் எனவும் திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது அறையை தடுக்க வேண்டுமானால் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தற்போது திருச்சி மாவட்டத்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிவதாகவும் வேதனை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *