திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த மார்கிரேட் ஜெனிபர் மற்றும் அவரது கணவர் பிரசாத் தம்பதியினர். மார்கிரேட் ஜெனிபரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்த லாசர், சூரியூரை சேர்ந்த சுப்பிரமணியன், தேனீர் பட்டியை சேர்ந்த வீரமணி உள்ளிட்ட மூன்று பேர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி செவிலியர் பணி வாங்கி தருவதாக 4 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் செவிலியர் பணியும் மார்கிரேட் ஜெனிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மாதம் ஆன பிறகு தற்காலிக பணியாளர் என்கிற பெயரில் அவரை அனுப்பி உள்ளனர். மார்கிரேட் ஜெனிஃபருக்கு நிரந்திர பணி வழங்கப்படாததால் லாசர் உள்ளிட்ட மூன்று பேரிடம் அவர் தொடர்ந்து இது குறித்து கேட்டு வந்துள்ளார். கண்டிப்பாக வேலை உண்டு என்றும் அதற்கான ஜி.ஓ கையில் உள்ளது என்று கூறி அவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
எனவே இதுகுறித்து ஏற்கனவே திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதில் லாசர் என்பவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரும் தற்போது பெயிலில் வெளி வந்துள்ள நிலையில் மீதமுள்ள இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கைக்குழந்தையுடன் ஐ.ஜி அலுவலகத்தில் ஜெனிஃபர் புகார் மனு அளித்தார்.
((அரசு வேலை வாங்கித் தருவதாக எத்தனையோ மோசடிகள் நடைபெற்று அது ஊடகங்கள் வாயிலாக வெளி வரும் நிலையில் நீங்கள் ஏன் இப்படி பணம் கொடுத்தீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தவறு இழைத்து விட்டேன் என்று ஜெனிபர் வேதனை தெரிவித்தார்))
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments