திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவைகள் அப்பகுதிமக்களும், வாகன ஓட்டிகளும் நாள்தோறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாய்களை பிடிக்க அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை நாய்க்கு வெறி பிடித்தது அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை துரத்தி கடித்ததில் 4 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நின்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த நாயை அடித்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது ரோந்து வந்த போலீசார் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தார். ஒரு மணி நேரம் ஆகியும் மாநகராட்சியிலிருந்து யாரும் வராததால் அங்கு உள்ள இளைஞர்களை நாயை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே திருச்சி மாநகரில் கால்நடைகளால் வாகன விபத்துகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகமாகி உள்ளது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை வேண்டும் என திருச்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments