திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் வனப்பகுதியில் குரங்குகள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அப்பகுதிக்கு சென்று வனத்துறை அதிகாரிகள் பார்த்த பொழுது இருபத்தி நான்கு குரங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அதில் 6 பெண் குரங்குகளும் 18 ஆண் குரங்குகளும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குரங்குகள் இறப்பிற்கு காரணம் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பிரேத பரிசோதனை செய்யவும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு குரங்குகள் இறப்பிற்கு என்ன காரணம் என தெரிய வரும். யாரும் விஷம் வைத்துக் கொன்றார்களா இல்லை எதுவும் விஷய உணவுகளை இவை உட்கொண்டதா என்பது குறித்தும் தெரியும் என வனத்துறை அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் 18க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொள்ளப்பட்டது. தற்போது குரங்குகள் வனப்பகுதியில் கூட்டமாக இறந்து கிடப்பதும் பெரும் அதிர்ச்சியை திருச்சி மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments