நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சுதந்திர போராட்ட  வீரர்களின் வாகன ஊர்தி அணிவகுப்பு ஊர்வலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்வர் சென்னையில் குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்தியை தமிழகம் முழுவதும் சுற்றிவர கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற  வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி மன்னார்புரத்திற்கு இன்று(28.01.2022) காலை வந்தது. இந்த அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர்  வரவேற்று 
பார்வையிட்டனர்.

தமிழகம் முழுவதும் வலம் வர இருக்கும் ஊர்தியில் மருது சகோதரர்கள், ஜான்சிராணி, வேலூர் கோட்டை அமைப்புடன் சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி ஊர்தி வந்தது .பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           218
218                           
 
 
 
 
 
 
 
 

 28 January, 2022
 28 January, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments