தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி 41 பயணிகளுடன் நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் திருச்சி பஞ்சப்பூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 23 பேர் காயம் அடைந்தனர் காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த ஞானசேகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments