திருச்சி கேர் அகாடமியில் மருத்துவ கலந்தாய்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.நாளை(06.02.2022) காலை ஆண்டாள் தெருவில் உள்ள கேர் பயிற்சி மையத்தில் நடக்கிறது. இது விழுதுகளுக்கு வேரின் பாராட்டு, நட்சத்திரங்களுக்கு மேகத்தின் தாலாட்டு, உழைப்பிற்கு உண்மை தரும் கெளரவம்.

இவ்விழாவில் கேர் அகாடமி இயக்குனர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி , சுகுமார், முத்துச்செல்வம் மருத்துவர்கள் இளந்தமிழன் ,தமிழன்பன் வாழ்த்துரை வழங்குகிறார்கள். ஏற்புரை மருத்துவ மாணவர்களும் மகிழ்வுரை மருத்துவ மாணவர்களின் பெற்றோர்களும் வழங்கவுள்ளனர் .சுற்றுச்சூழலில் ஆழிப்பேரலையின் நிமிர்ந்து நின்று சோதனைகளைத் தாண்டி மாணவர்களை சிகரம் தொட்ட கேர் அகாடமி என்ற பெருமையும் சிறப்பும் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வின் மூலம் தேர்வான 15 மாணவர்களுக்கு பாராட்டி கௌரவிக்கப் படுகிறார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments