துபாயிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சென்னை இராயபுரம் பகுதி சேர்ந்த இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இரு பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் கொண்டுவந்த உடைமைகள் மறைத்து எடுத்து வந்த சுமார் இரண்டரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என தகவல் தெரிவித்தனர்.கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலம் அறிய
https://t.me/trichyvisionn






Comments