திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று காலை திருச்சி, சுப்ரமணியபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ஆய்விற்காக புறப்பட்டுச் சென்றார். திடீர் ஆய்விற்காக சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவர் பாதுகாப்பு உபகரங்கணை பயன்படுத்தியபடி சென்றார்.
அவரின் பாதுகாப்பிற்கான இரண்டு போலீஸ் வாகனங்களும் பின் தொடர்ந்து சென்றது. திருச்சியில் காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சைக்கிளிங் பயணம் 8.50 மணிக்கு வையம்பட்டி காவல் நிலையத்தில் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மீண்டும் அங்கிருந்து சைக்கிளிங் திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 120 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட எஸ்.பி.யை பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments