சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற இரண்டு அலங்கார ஊர்திகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தலுக்காக நேற்று வந்தது.

இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அலங்கார ஊர்திகளை மலர் அலங்காரம் தூவி வரவேற்றுப் பார்வையிட்டார். இந்த இரண்டு அலங்கார ஊர்திகள் ஒன்றில் மகாகவி பாரதியார். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார். தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகளும், மற்றொரு அலங்கார ஊர்தியில் மூதறிஞர் இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர்,
சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.அய்யர், கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகசீலர் கக்கன், தந்தை பெரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
 இந்த இரண்டு அலங்கார ஊர்திகளும், இன்று (07.02.2022) திங்கட்கிழமை மற்றும் (08.02.2022) செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த இரண்டு அலங்கார ஊர்திகளும், இன்று (07.02.2022) திங்கட்கிழமை மற்றும் (08.02.2022) செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           31
31                           
 
 
 
 
 
 
 
 

 07 February, 2022
 07 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments