நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட், மலைக்கோட்டை, பொன்மலை, ஏர்போர்ட் ஆகிய வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் திமுக தெரு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த பின்னர் அவர் பேசுகையில்… வாக்கு கேட்க வேண்டியது எங்களது கடமை. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

அதுபோல பிப்ரவரி 19ம் தேதி எங்கள் கட்சி சின்னத்தில் வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வேட்பாளர்களை பெற்றிருக்கிறோம். திருச்சி கோட்டையில் பறக்கின்ற திமுக சார்ந்த இரு வண்ண கொடி தான் சென்ஜார்ஸ் கோட்டையில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எதிர்கட்சியை திட்டியோ, குறை கூற வேண்டிய அவசியம் இல்லை. நீட் தேர்வால் ஏராளமான பள்ளி மாணவர்களை இழந்திருக்கிறோம்.

நீட் தேர்வு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை மதவாத சக்திகளுக்கு பயந்து கொண்டு அதிமுக புறக்கணித்ததாக தெரிவித்தார். இப்படிபட்ட எதிர்கட்சிக்கு மீண்டும் பாடம் புகட்டும் வகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் திமுக வெற்றி பெற்றது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           6
6                           
 
 
 
 
 
 
 
 

 07 February, 2022
 07 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments