திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் மலைவாசலில் 48 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 11 கடைகள் சுமார் 5கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இரண்டு கடைகளுக்கு மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

மீதமுள்ள கடைகளுக்கும் சீல் வைக்கும் பணி தொடர்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள கடைகள் வழக்கு முடிந்தவுடன் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments