Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனியாக போட்டியிட முடியாத திராணி இல்லாத கட்சி திமுக – தனியே நெஞ்சை நிமிர்த்தி தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக – திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி… திருச்சி மாநகராட்சி சிறப்புமிக்க மாநகராட்சி. அதிக உறுப்பினர்களைக் கொண்டு அதிமுகவைச் சேர்ந்தவர் திருச்சி மேயராக வரவேண்டும். அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஏதோ ஏதோ பேசுகிறார்

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்தி வருகிறார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வழக்குகள் போட்டு அச்சுறுத்தி வந்தவர்கள் திமுக அரசு. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சபதமேற்று எப்படி முதலமைச்சர் ஆனார்களோ அதுபோல நாமும் சபதமேற்று வெற்றி பெற வேண்டும். ஸ்டாலினின் மிரட்டல்களுக்கும் உருட்டல்களுக்கும் அதிமுக அடிபணியாது
எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது.

எதையும் சந்திக்கக்கூடிய திராணியும் தெம்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது. நேரடியாக வெற்றி பெற முடியாது என்பதால் இன்றைக்கு கொல்லைப்புறம் வழியாக வெற்றிபெற நினைக்கிறது திமுக. கூட்டணி கட்சி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியாத திராணியில்லாத கட்சி திமுக. குற்றவாளிக்கு என்றும் பரிந்து பேசியது கிடையாது அதிமுக. காவல்துறை திமுகவிற்கு ஏவல் துறையாக இருக்கிறது. ஆட்சி மாறும் காட்சிகள் மாறும் ஒரு நாள். அதிக எதிர்பார்ப்போடு அரசு ஊழியர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள். நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டது திமுக.

அதிமுக அரசில் எந்த திட்டங்களும் செய்யவில்லை என பச்சைப் பொய்யை ஸ்டாலின் கூறி வருகிறார். அதிக தார் சாலைகள் அமைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு அப்பா (ஸ்டாலின்) 70% பொய், மகன் (உதயநிதி ஸ்டாலின்) 90% பொய் பேசி வருகிறார்கள். தைப்பொங்கல் வரும்போதெல்லாம் ஸ்டாலின் ஞாபகம் தான் வரும். திமுகவிற்கு ஓட்டுப் போட்டதற்கான தண்டனையாக கூட்டுறவு வங்கியில் வட்டி கட்டி அனுபவித்து ஆக வேண்டும்.

மக்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் உடற்பயிற்சி செய்வது, சைக்கிளிங் பண்ணுவதை வேலையாக கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 9 மாதங்களில் மக்கள் விரோத அரசாக அமைந்துள்ளது திமுக அரசு. நீட் தேர்வு குறித்து ஆதாரங்களுடன் தான் நான் பேசி வருகிறேன். பொய் பொய்யாகப் பேசி இருக்கும் செல்வாக்கை  முதலமைச்சர் ஸ்டாலின் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஒற்றுமையாக இருந்து அதிமுகவினர் பணியாற்றினால் திமுக என்ற தீய சக்தியை அகற்றிவிடலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *