தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மற்றும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் பல பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56 வது வார்டு கருமண்டபம் பகுதியில் தீப்பட்டி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் கவிதா பெருமாள் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து வேட்பாளர் கவிதா பெருமாளின் ஆதரவாளர்களான சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மாந்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாயை குமார் என்பவரிடம் பணத்தை கொடுத்த பொழுது ஓட்டுக்கு எதற்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பொது மக்களை கூட்டி நால்வரையும் துரத்தி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடினர்.

இதில் சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரையும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் சுயேட்சை வேட்பாளர் ஆயிரம் ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுத்ததால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கருமண்டபம் பகுதியில் திமுக, அதிமுக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் படை அதிகாரி ராஜ்குமார் புகாரைப் பெற்றுக்கொண்டு பின்னர் காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்ததால் போராட்டத்தை அரசியல் கட்சியினர் கைவிட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments