திருச்சி மாநகர கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பசுபதி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். தனது மாமனார் மாமியார் ஆகியோர் கீழ் வீட்டில் வசிப்பதன் காரணமாக அவர் தன்னுடைய வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் 20 பவுன் நகை LED டிவி ஆகியவை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments