பள்ளி விளையாட்டு விழா
உறையூர், ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் 12-ஆம் ஆண்டு விளையாட்டு விழா “Synergic Spark 2K26” 07.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

விக்னேஷ் குழும நிறுவனங்களின் அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமையேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு, மாணவர்களின் விளையாட்டுத் திறனைப் பாராட்டி சிறப்பித்தார்.
அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறந்த அணியாக மஞ்சள் அணி தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இவ்விழாவில் தலைவர் கோபிநாதன், துணைத்தலைவர் லட்சுமி பிரபா, நிர்வாக இயக்குனர் அஞ்சிதா கோபிநாதன் இயக்குநர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் கிருத்திகா, துணை முதல்வர் ஜெயந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments