முன்னாள் முதல்வர் கருணாநிதி 8 ஆம் ஆண்டு நினைவு நாள் – முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு முன்னாள் தமிழக கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் அண்ணா விளையாட்டு அரங்கம் பகுதியில் இருந்து பேரணியாக வந்து உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மதிவாணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments