கூகூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சோழர்கால கட்டிடங்கள். லால்குடி வட்டம் கூகூர் கிராமத்தில் சமீபத்தில் வறட்சியால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் மிகவும் வற்றி உள்ளது.கொள்ளிடம் கரையிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் பழங்கால செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட கட்டிடம் காணப்படுகிறது. அங்கு கல் தூண்களும், பழங்கால பானை ஓடுகளும் காணப்படுகின்றன. மிகப்பெரிய செங்கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் களிமண் பூச்சி கொண்டு கட்டப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இந்த அமைப்பிற்கும் நேர் எதிரே 1 கிலோமீட்டர் தெற்கு பக்கத்தில் கல்லணை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்லணையின் வடபுறத்தில் உள்ள இந்த அமைப்பு ஆதிகாலத்தில் கல்லணையின் தொடர்ச்சியாகஇருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.அல்லது படகு துறை, அல்லது அரண்மனையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதில் உள்ள செங்கல் சுமார் 15 கிலோ எடை கொண்டதாகவும் தற்போதைய செங்கல் 5 வைத்தால் அது ஒரு செங்கலாக உள்ளது என்றும் தெரியவருகிறது.கொள்ளிடம் ஆட்சியில் காணப்படும் இந்த பழங்கால கட்டிட அமைப்பு மற்றும் மண்பாண்டங்கள் மற்றும் கல்தூண் அமைப்புகளை சோதனை செய்ய இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு இடையே இப்பகுதியில் புதையல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அரசு உடனடியாக இந்த பகுதியை பாதுகாத்து ஆய்வு செய்து புதிய வரலாற்றை கண்டுபிடிக்குமா.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments