காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலானது திருச்சி ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 7.40 மணிக்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது, அப்போது ரயிலில் பயணிகளின் உடமைகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கமான சோதனை செய்தனர். ரயில்வே உதவி பாதுகாப்பு ஆணையர் அந்த சின்னத்துரை தலைமையிலான ரயில்வே பாதுகாப்புபடை போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 வட மாநிலத்தவர் மற்றும் திருச்சியை சேர்ந்த ஒருவரின் உடைமைகளை சோதனையிட்டதில் அவர்கள் கொண்டுவந்த பைகளில் இருந்து வளையல், வளையல், நெக்லஸ், ஆரம், மாலை, நெத்திச்சுட்டி உள்ளிட்ட 6.8கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு 3 கோடி ஆகும்.
இதனையடுத்து திருச்சி அண்ணா நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த அருணன், ஹூக்ளியைச் சேர்ந்த அனிர்பன் முகர்ஜி, துர்காபூரைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி 3 பேரையும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட நகைகள் மதிப்பு குறித்து மாநில வரி அலுவலர் செல்வம், துணை மாநிலவரி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் கணக்கீடு செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments