தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட தற்போது புதிதாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் பணியிடங்கள் :
தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் 45 தனியார் பள்ளிகள் தங்களின் காலியிடங்களை நிருபிக்க கொள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றன.

தகுதிகள் :
தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணக்கு பதிவியல், பொருளியல், கணக்கியல், வரலாறு, வணிகக் கணிதம், இசை, உடற்கல்வி, போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
கல்வித்தகுதி – இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி.
முகாம் நடைபெறும் நாள் – 27.02.2022
முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
முகாம் நடைபெறும் இடம் – செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி கன்டோன்மென்ட் திருச்சி.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           211
211                           
 
 
 
 
 
 
 
 

 24 February, 2022
 24 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments