திருச்சி பாலக்கரை தர்மபுரம் அந்தோணியார் கோவில் தெருவில் ராணி மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதே பகுதியில் இவரது கணவர் அருண்குமார் தனது அம்மா பிலோமினா வீட்டில் அவருடைய தங்கை மகன் நிர்மல் குமார் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இன்று (27.02.2022) மாலை அருண்குமார் மற்றும் நிர்மல் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்த போது, நிர்மல் குமார் தனது மாமாவான அருண்குமாரிடம் நீங்கள் அத்தை உடன் சேர்ந்து வாழ வேண்டும் ஏன் பிரிந்து வாழ்ந்து வருகிறீர்கள் என்று பேசிக்கொண்டிருந்தபோது இவ்விருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
 பின்னர் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டார்கள். அப்போது அருண்குமார் அருகில் உள்ள தனது மனைவி ராணி வீட்டிற்கு சென்று உள்ளே தீ வைத்து விட்டு ஓடிவிட்டார். உள்ளே ராணி புகை வருவதை பார்த்து தீ எரிந்து கொண்டிருப்பது தெரிந்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை முயற்சி செய்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவல் அறிந்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்த சம்பவம் தொடர்பாக நிர்மல் குமாரிடம் விசாரணை நடத்தினர். தீ வைத்த அருண்குமார் ஓடிவிட்டார். தீ முழுவதும் அணைக்கப்பட்டு யாருக்கும் எந்த தீக்காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLano

 31 Oct, 2025
31 Oct, 2025                           7
7                           
 
 28 February, 2022
 28 February, 2022

Comments