திருச்சி மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் ஒருவரை மட்டுமே அழைத்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது .65 கவுன்சிலர்களுக்கும் பதவியேற்பை மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் செய்து வைப்பார். 65 வார்டுகளில் திமுக 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .காங்கிரஸ் 5 இடங்களிலும் அதிமுக 3 மதிமுக 2,விசிக,2 கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்று பதவியேற்று இந்த ஐந்தாவது மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை அலங்கரிக்க உள்ளனர். இந்நிகழ்வை திருச்சி விஷன் நேரலையாக யூடியூப் மூலமாக ஒளிபரப்ப உள்ளது
நேரலை||திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியேற்பு உங்கள் திருச்சி விஷனில் யூடியூப் மூலமாக நேரலையில் காலை 10 மணி முதல்
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO






Comments