திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும், போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்கும் சமூக விரோதிகளை கைது செய்யவும். காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.

திருச்சி மாநகரில் கடந்த 10.02.22-ந்தேதி அரியமங்கலத்தில் உள்ள ராமலிங்கம் நகரில் அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் எதிரிகள் 1.அரவிந்த் வயது 25 மற்றும் ஜெர்பின் வயது 23 ஆகியோர்கள் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்தும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 80 1100 போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்து பாட்டில்களை கைப்பற்றியும், மேற்படி எதரிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

எனவே. மேற்படி எதிரிகள் அரவிந்த் மற்றும் ஜெர்பின் ஆகியோர் தொடர்ந்து போதை மாத்திரை விற்று இளைஞர் சமுதாயத்தை கெடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்களம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments