தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020-ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணையிணை வழங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரில் 20 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 21 நபர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணையை திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,
இன்று (08.03.22)-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் வழங்கினார்.
மேற்படி தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 14.03.2022-ஆம் தேதி முதல் 7 மாத காலம் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சியும், ஒரு மாத காலம் மாவட்ட / மாநகரகத்தில் நடைமுறை பயிற்சியும், ஆக மொத்தம் 8 மாத காலங்கள் காவல் பயிற்சி பெற்ற பின்னர் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் தேவைக்கேற்ப பணி நியமனம் செய்யப்படுவர்கள்.


மேலும், தமிழ்நாடு காவல்துறைக்கு புதியதாக பணி நியமனம் பெற்ற நபர்களை வாழ்த்தியும், பயிற்சி காலங்களில் நன்றாக பயிற்சி பெற்றும், அதன்பின்னர் தங்களது காவல் பணிகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு நற்பெயர் நல்கிட வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேலான அறிவுரையை வழங்கியுள்ளார்.#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           36
36                           
 
 
 
 
 
 
 
 

 09 March, 2022
 09 March, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments