Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மத்திய மண்டல ஐஜி- யின் “மகளிர் தின வாழ்த்து” கவிதை!

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் கூற்றுக்கிணங்க பெண்களின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தன்னுடைய கவிதையின் மூலம் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனக்குத் தெரிந்த தெய்வங்கள்

எனக்குத் தெரிந்த முதல் பெண்ணும் நீ !என்ளை அறிமுகப்படுத்தில் பெண்ணும் நீ – அம்மா! 

எனக்குத் தெரிந்த முதல் தோழி நீ என்னை இயக்கிய முதல் எதிரியும் நீ – அக்கா!

நான் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்த தொண்டன் நீ – என் கருத்துக்களை யோசிக்க வைத்த எதிர்கட்சியும் நீ – தங்கைகளே!!

என் மகிழ்ச்சி தருணங்களின் மைல்கல்லும் நீ என் தளர்ச்சி தருணங்களின் தண்ணீர் பந்தலும் நீ – மனைவி

என் காதல் உணர்வைக் கண்டுபிடிக்க வைத்தவர்களும் நீங்கள்

நான் கடமை தவறாமல் காக்கும் காக்கி உடைகளும் நீங்கள் – தோழிகள் என்னுள் இருக்கும் மனிதத்தை பாலூட்டி வளர்ப்பவர்களும் நீங்கள்

பலருள் இருக்கும் பாலுணர்வு வன்மத்தை அம்பலபபடுத்தியவர்களும் நீங்கள் – பாதிக்கப்பட்ட பென்கள் – 

வெற்றி இலக்கைத் தொடுவதற்கு வேர்வையாலும், வலிகளாலும் வழி ஏற்படுத்தியவர்கள் நீங்கள் இலக்கை அடைந்தபின் என்போன்றோரை இயக்கும் இன்ஸ்பிரேசனும் நீங்கள் தான் – சாதித்தப் பென்கள்..

நானும் நீயும், நாமும் நீங்களும் சேர்ந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் சாதக்கப் பிறந்தவர்கள் ஆகலாம்.

அதற்கான சூளுரைதான் மகளிர் தின வாழ்த்துகள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *