தென்கயிலாயம் என்று பக்தர்களால் அன்போடு போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் சுகபிரசவம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 17ம்தேதி தெப்பதிருவிழாவையொட்டி இன்று (09.03.2022) மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
முன்னதாக தாயுமானவர் சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்ய, பின்னர் மேளதாளங்கள் முழங்கிட ரிஷப கொடியேற்றப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
கொடியேற்றத்தை தொடர்ந்து இன்றுமுதல் கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷபம், யானை, தங்க குதிரை ஆகிய வானங்களில் நாள்தோறும் தாயுமானவர், மட்டுவார்குழலம்மை சமேதராக வலம் வருவார். தொடர்ந்து வரும் 17ம்தேதி தெப்பத்திருவிழா நடைபெறும். அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி 5முறை வலம்வருவார். தொடர்ந்து 18ம்தேதி தீர்த்தவாரியும், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை உதவி ஆணையர்  விஜயராணி உள்ளிட்ட கோயில் ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments