திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன் நகரில் தனியார் நிறுவனத்தின் சார்பில் இனிப்பு விற்பனை நிலையம் இன்று காலை புதிதாக திறக்கப்பட்டது.
இதனையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 70 வருடங்கள் இந்திய மக்களை இசையால் மகிழ்வித்து அண்மையில் மறைந்த பாடகர் தேசியக்குயில் லதா மங்கேஷ்கரை நினைவு கூறும் வகையில் அவரது முழு உருவ கேக் சிலை பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கேக்கானது 7 அடி உயரம், 70 கிலோ எடை கொண்டதாகும். முழுவதும் கேக்கினால் செய்யப்பட்ட அவரது சிலையை பொது மக்களும், வாடிக்கையாளர்களும் பார்த்து ரசித்து சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments