Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மணல் கடத்துவதாக புகார் கூறியவரை மிரட்டிய தாசில்தார் ஆடியோ சமூகவலைதளத்தில் பரவல்

திருச்சி மாவட்டம். மணப்பாறை தாசில்தாரக பணியாற்றுபவர் சேக்கிழார், இவருடைய மொபைல் எண்ணிற்கு மணப்பாறை அருகே தொப்பம்பட்டி பகுதியில் இரவு – பகலாக மணல் அள்ளப்படுவதாக அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது சம்பவயிடத்துக்கு வருவதாக கூறிய கிராம நிர்வாக அலுவலர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் புகார்தாரர் கண்ணன் சமந்தபட்ட மணப்பாறை தாசில்தாருக்கு தொடர்பு கொண்டார். 

இந்த ஆடியோ பதிவில் தாசில்தார் சேக்கிழார் பேசுகையில்., பர்மிஷன் வாங்கிட்டுதான் மணல் ஓட்டுறாங்க, இது கவர்மெண்ட் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. மேலிட அனுமதி இரவும் பகலும் ஓட்டுவாங்க நீங்க பேசாம தான் இருக்கனும், யாரும் கேட்க கூடாது, என பேசிய தாசில்தார் தனது பெயரை கூற மறுத்து மிரட்டல் விடும் பாணியில் போனை வைய்யுயா என்று பேச்சை முடித்தார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வரை புகார் சென்றது.

இதனை தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கலெக்டர் சிவராசு, மணப்பாறை தாசில்தார் சேக்கிழாரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *