நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு கே.என்.நேரு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments