திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் கணக்குக்குழு, பொது சுகாதார குழு, கல்வி குழு, மற்றும் பணிகள் குழு தலைவர்கள் தேர்தல் இன்று நடைபெற்றது.
நியமன குழு உறுப்பினராக கொ.ச.நாகராஜன் வார்டு எண் 25, கணக்குக்குழு தலைவராக வ.லீலாவார்டு எண் 49, பொது சுகாதார குழுத் தலைவராக ஒ. நீலமேகம் வார்டு எண் 42, கல்விக்குழு தலைவராக வே.பொற்கொடி வார்டு63, பணிகள்குழுத்தலைவராக கவிதா வார்டு 58, ஆகியோர் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக குழு தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் சான்றிதழ் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments