திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஆட்டோவை அப்பகுதியை சேர்ந்த ஹரிஹரன் ஓட்டி வந்துள்ளார். அதிவேகத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த பொழுது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகளில் மோதியது. எதிரே புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரதீப் குமார் ஒட்டி வந்த ஆட்டோ மீது தடுப்பு கம்பிகள் சாய்ந்து கட்டுபாட்டை இழந்து பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதைக்கு புகுந்தது. ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு 60 வயதான ராதா என்ற பெண்மணி நடைபாதையில் நடந்து வந்த பொழுது கட்டுப்பாடு வநத ஆட்டோ மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்க்கு ஸ்ரீரங்கம் போலீசார் வந்து விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுனர்களை மருத்துவமனைக்கு பொதுமக்கள் உதவியுடன் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் ஹரிஹரன் போதையில் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதையில் ஆட்டோ ஓட்டிய ஹரிஹரன் மற்றும் பிரதீப்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் கடந்த 10 நாட்களில் இது மூன்றாவது விபத்து. இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதால் சாலையில் ரப்பராலான வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments