திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலம் செட்டியாபட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபான தயாரிப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினரும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று வீட்டுக்குள்ள அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு சுமார் 450 லிட்டர் மதுபானங்களும் 10,000 காலி மதுபான பாட்டில்கள், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள், எந்திரம் உள்ளிட்ட மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேரை பிடித்த மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் மாவட்ட தனிப்படையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் முதற்கட்ட விசாரணையில் சமயபுரம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து ஜனவரி முதல் 4 மாதங்களாக போலி மதுபான தயாரித்து வந்தது தெரியவந்தது.

மேலும் ஒரு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments