திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த ஜம்முநாதபுரம் ஜெயம்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் ஒப்பந்தகாரராக உள்ளார். இவரது மனைவி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டில் கட்டிட வேலைக்கு தேவையான இரும்பு குழாய்கள் மின், மோட்டார்கள் மற்றும் 100 லிட்டர் டீசல் ஆகியவை வைத்திருந்தனர்.
இந்நிலையில் 2 வாலிபர்கள் தர்மராஜ் வீட்டில் வைத்திருந்த 100 லிட்டர் டீசல், இரும்பு குழாய்களை திருடி சென்றுள்ளனர். வாலிபர்கள் பொருளை திருடி சென்ற காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜெகநாதபுரம் காவல்நிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments