திருச்சி மண்ணச்சநல்லூர் அர்ஜூனன் தெருவை சேர்ந்த மருதை மகன் அன்புசெல்வன் (32). இவர் மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில், ஆவணங்கள் பாதுக்காக்கும் அறை பதிவறை எழுத்தராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். பணியில் இருக்கும் போதே அன்புசெல்வன் அடிக்கடி மதுபோதையில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
அப்படி மதுபோதையில் இருக்கும் போதெல்லாம் உடனிருக்கும் அலுவலர்கள் அவரை மீட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பணியில் இருந்த அன்புசெல்வன் அளவிற்கு அதிகமான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முழுவதுமாக நிதானத்தை இழந்த நிலையில் இருந்த அன்புசெல்வனை, துணை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் மீட்டு ஆட்டோ மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அன்புசெல்வனை பரிசோதனை செய்த மருத்துவர், அன்புசெல்வன் அளவிற்கு அதிகமாக மது மயக்கத்தில் இருந்ததால் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். பணியில் இருந்த பதிவறை எழுத்தர் மதுபோதையில் இருந்த சம்பவம் பொதுமக்களிடையே முகச்சுழிப்பு ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments