திருச்சி குழுமணி மெயின் ரோட்டில் சுப்புராம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இரண்டு சக்கர வாகனத்தை சரி செய்வதற்காக அங்கு உள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் வந்துள்ளார்.
திடீரென முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்த மூன்று பேர் ரவிசந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். காவல்துறையினர் இருசக்கர வாகனம் கடையில் இருந்த நபரை பிடித்து தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் முன்விரோதம் காரணமாக 4 பேர் அவரை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்க்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வந்து விசாரணை செய்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments