திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள சிங்க குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 7 ம் வகுப்பு மாணவி சத்தியா வயது (13), 8 ம் வகுப்பு மாணவி தனுஷ்கா வயது (14) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள செங்குடித் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சத்தியா வயது (13). இப் பகுதியிலுள்ள திருவெள்ளறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தோழி அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் மகள் தனுஷ்கா வயது (14). இவர் இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இப் பகுதியிலுள்ள சிங்க குளத்தில் அவரது உறவினர்களோடு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் காணவில்லை. அவரது உறவினர்கள் அக்கம் பக்கம் உள்ள மக்களோடு குளத்தில் தேடியபோது இரண்டு மாணவிகளும் குளத்தில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டனர் உயிரிழந்த சத்தியா மற்றும் தனுஷ்கா ஆகிய இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..



            
            
            
            
            
            
            
            
            
            
Comments