திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பதாக தொடர்ந்து போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து இன்று காலை திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தின் அணுகு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு திடீரென அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது உள்ளே பத்துக்கும் மேற்பட்டவர்கள் மது வாங்கிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து வெளியே சென்றனர். மேலும் மதுபானம் விற்ற பேராவூரணி கட்டுமாவடி சேர்ந்த ராஜ்குமார் மற்றும் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த ராமு ஆகிய
இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உள்ளே சோதனை நடத்திய போது விற்பனைக்காக சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments