திருச்சி திண்டுக்கல் சாலை பல்வழித்தடத்திலிருந்து நான்கு வழி சாலையாக அகலப்படுத்த பேவர் பிளாக் பயன்படுத்தி சாலை அமைக்க ரூபாய் 74.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி பிராட்டியூர் அருகே இந்நிகழ்வை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

முன்னதாக சாலையோரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் பொதுப்பணித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த சாலை 7.400 கிலோமீட்டர் நீளத்திற்கு 20 சிறு பாலங்களை புதிதாக அமைப்பது ஏற்கனவே உள்ளவற்றை அகல படுத்துவது உள்ளிட்ட பணிகளும் நடைபெறும். பணி முடிந்தபின் 18 மீட்டர் அகலத்தில் இச்சாலை காட்சியளிக்கும் என அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  பின்னர் ஜங்சன் உயர்மட்ட மேம்பாலப் பணி,
சென்னை– திருச்சி– திண்டுக்கல் சாலை முதல் அண்ணா சிலை வழியாக காவிரி பாலம்,அண்ணாசிலை முதல் மல்லாட்சிபுரம் (குடமுருட்டி ) உயர்மட்ட சாலை அமைத்தல்,தலைமை தபால் நிலையம் முதல் நீதிமன்ற ரவுண்டானா உயர்மட்ட சாலை அமைத்தல், துவாக்குடி – பால்பண்ணை சேவை சாலைப் பணிகளை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு ஆகியவற்றை மேற்கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 03 May, 2022
 03 May, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments