திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூசாரிக்களத்தை சேர்ந்தவர்கள் அழகர் – காமாட்சி தம்பதியினர். இவர்கள் பேருந்து நிலையம் அருகில் தள்ளுவண்டியில் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள்.
குடும்ப செலவிக்காக ஸ்டேட் பேங்கியில் 2 பவுன் நெக்லஸை காமாட்சி அடகு வைத்து ரூ.55 ஆயிரம் வாங்கியுள்ளார். பணம் பேங்க் கணக்கில் இருந்த நிலையில், பணத்தை எடுக்க அங்கிருந்த ஏடிஎம்மிற்கு சென்ற காமாட்சி, அங்கிருந்த இளைஞர் ஒருவரை ஏடிஎம்மில் பணம் எடுத்து தர கூறியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுப்பதுபோல் நடித்து, பணம் வரவில்லை எனக்கூறி ஏடிஎம் கார்டை காமாட்சியிடம் கொடுத்துவிட்டார். அதனைத்தொடர்ந்து பேங்கியின் உள்ளே சென்ற காமாட்சிக்கு, பேங்க் அதிகாரிகள் மூலம் அவரது ஏடிஎம் கார்டு மாறி இருந்ததும், அதில் ரூ.28,500 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் காவல்நிலையம் சென்ற காமாட்சி அளித்த புகாரினை தொடர்ந்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு மணப்பாறை போலீஸார் தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO






Comments